அஜித்தை பழிவாங்க சதித்திட்டம் தீட்டும் விக்னேஷ் சிவன்.. பின்னணியில் நயன் எடுத்த அதிரடி
பிரபல இயக்குனர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பல பன்முகங்களை கொண்டவர் தான் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவை வைத்து 'போட போடி' என்ற படத்தை இயக்கினார். ஆனால் இவருக்கு முதல் படம் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து இவர் 'நானும் ரவுடி தான்' என்ற படத்தை இயக்கி பாப்புலர் இயக்குனராக மாறினார். விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்திற்கான ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கவிருந்த நிலையில் AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேரினார். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேகமாக பரவியது.
AK 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க போகிறார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினர் வெளியிடவில்லை.

விக்னேஷ் சிவன் கூட்டணி
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்தின் AK 62 போட்டியாக ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதில் லவ் டுடே இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க போகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கயிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
