நயன்தாராவுக்கு இப்படித்தான் ஆகுமா!! தாலி கட்டிய நேரம் சரியில்லை-ன்னு சொன்ன விக்கியின் பெரியப்பா!!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் அவர்கள் சந்தித்த திருப்பதி காலணி பிரச்சனை, வாடகைத்தாய் பிரச்சனை, விக்னேஷ் சிவனின் ஏகே62 பரிபோன பிரச்சனை, நயன் தாராவின் அடுத்தடுத்த தோல்வி படங்கள் என்று பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள்.

இந்நிலையில், திருமணத்திற்கு முன்பே நடிகை நயன் தாராவிற்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறியிருக்கிறார். அதனால் திருமணத்திற்கு முன் பூஜை செய்து பரிகாரம் செய்ய வாழை மரத்திற்கு முதல் முறை தாலி கட்டியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
பின் பிரம்மாண்ட முறையில் நல்ல நேரம் பார்த்து திருமணத்தை முடித்தார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் நயன் தாரா - விக்னேஷ் சிவனும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதனால் தம்பதியினர் ஜோதிடரை சந்தித்து பரிகாரம் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதிடம் மீண்டும் திருமணம் செய்யக்கோரி பரிகாரம் செய்யச் சொல்லி இருக்கிறார். இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மூன்றாம் முறையாக தாலி கட்டவுள்ளார் என்றும் நயன் தாரா இரண்டாம் திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளது.
ஆனால் இந்த பிரச்சனையை விக்னேஷ் சிவனின் பெரியப்பா அன்றே கணித்து கூறியிருக்கிறார். அதாவது விக்னேஷ் சிவன் சரியான முகூர்த்த நேரத்தில் நயன் தாராவுக்கு தாலிக்கட்டவில்லை என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவனின் பெரியப்பா.
குளிகை நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட்டாகும். அந்த நேரத்தில் தான் அவன் தாலிக்கட்டியிருக்கிறான் என்று முன்பே கூறியிருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.