இப்பயாது கல்யாணம் பண்ணிப்பியா மாட்டீயா! விக்னேஷ் சிவனை புலம்ப விடும் நயன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Apr 25, 2022 12:32 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன் தாரா தற்போது பாலிவுட் படமான ஹாருக்கானின் லயன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்திற்கு முன் ஆசை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

சமந்தா, விஜய் சேதுபதி, நயன் தாரா இணைந்து நடித்த இப்படம் வரும் 28 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் எல்லோரும் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்து வருகிறது.

அப்படி கடந்த டிசம்பர் நடக்க போகிறது என்று கூறி ஏமாற்றத்தை கொடுத்தனர். தற்போது அவர்களின் கடைசி பேச்சிலர் நாட்கள் வரும் ஜுன் மாதம் முடியும் என்று கூறப்படுகிறது. நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிச்சயத்தை சாதாரணமாக நடித்தியதை போன்று திருமணத்தையும் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக நடத்தி விடுவார்களா அல்லது பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார்களா என்பது அவர்களின் முடிவில் இருக்கிறது.