ஏன்பா இது உனக்கு ஓவரா தெரியல.. வருங்கால மனைவியை விட அதிக சம்பளம் கேட்க்கும் விக்னேஷ் சிவன்
salary
nayanthara
ajith kumar
vignesh shivan
By Kathick
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் நடிக்கும் படம் AK 62. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாருக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்துக்கு, சுமார் ரூ. 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், நயன்தாராவிற்கு ரூ. 10 கோடி சம்பளம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், AK 62 படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், நெட்டிசன்கள் பலரும், ஏன்பா இது உனக்கு ஓவரா தெரியலையா விக்கி என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.