அஜித்தை தொடர்ந்து மனைவிக்காக விக்னேஷ் சிவன் செய்த காரியம்!! கனெக்ட்-ஆன நயன் தாரா..
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நல்ல வரவேற்பு பெற்றதோடு அடுத்த படமே விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.
லேடி சூப்பர் ஸ்டார்
இடையில் நடப்பிலும் பாடல் வரிகளிலும் ஸ்கிரிப் ரைட்டராகவும் திகழ்ந்து வந்தார். நானும் ரவுடி தான் படத்தில் நயன் தாராவுடன் ஏற்பட்ட காதலால் 7 வருடம் கழித்து ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்காக பல விசயங்களை செய்து வரும் விக்னேஷ் சிவன், அவரை வைத்து பல படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். இதனைதொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தினையும் இயக்கவும் அதில் நயன் தாராவை கதாநாயகியாகவும் போடவுள்ளார். அஜித் எப்போவாது ஒருமுறை தான் இணையத்தில் எதையாவது கூறுவதுண்டு.
அட்டை விளம்பரம்
அப்படி துணிவு படத்திற்காக அட்டை விளம்பரம் செய்திருந்தார். அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவனும் பகிர்ந்திருந்தார். தற்போது மனைவி நயன் தாராவுக்கு பிரபல ஊடக பத்திரிக்கைக்கு அட்டை விளம்பரம் செய்திருக்கிறார். நம்பிக்கையைக் கொடுக்கும் நயன் தாராவின் கனெக்ட் என்ற தலைப்பில் நயனின் க்யூட் புகைப்படத்தோடு இருந்துள்ளது அந்த போஸ்டர். வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கனெக்ட் வெளியாகவுள்ள நிலையில் நாளை காலை 12 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.
