இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் பேச்சே வேலைக்காவாதாம்! அடம்பிடிக்கும் நயன் தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. நெற்றிக்கண், அண்ணாத்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
ஆசை காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார் நயன் தாரா. சமீபத்தில் படத்தின் பிரமோஷனுக்காக விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும் இணையதளங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
சமீபத்திய பேட்டியொன்றில், நயன் தாரா பற்றிய சில விஷயங்கள் கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. நயன் தாரா வாழ்க்கையில் நீங்கள் வந்த பின் அவரின் மார்க்கெட்டும் சரி அவரது கேரியரும் மாறியது எப்படி என்ற கேள்வியாக இருந்தது.
அதற்கு விக்னேஷ் சிவன், நயன் தாராவின் எந்த முடிவிலும் அவரின் விருப்பத்தோடு தான் செய்கிறார்கள். அது படமாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீமாக இருந்தாலும் சரி அவர்கள் தான் தேர்வு செய்வார்கள். பிரமோஷன் விசயத்திலும் அவரின் முடிவு தான் உறுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.