அம்மாவால் முறிந்து போன 9 வருட காதல்!! நயன்தாராவை போல் விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வியாம்...
லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாரா கடந்த 2020ல் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் 4 மாதம் கழித்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர். தற்போது ஒரு வயதை எட்டிய குழந்தைகளுடன் நயன் - விக்கி எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து நயன் தாரா சில காதல் தோல்விகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். அப்போது, நானும் ரவுடி தான் படத்தின் சமயத்தில் விக்னேஷ் சிவன் தான் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். இந்த இடத்திற்கு நான் வர விக்னேஷ் சிவன் தான் காரணம் என்று பல மேடைகளில் புகழ்ந்து தள்ளி வந்தார் நடிகை நயன் தாரா. இந்நிலையில் விக்னேஷ் சிவன் வாழ்க்கையிலும் காதல் தோல்வி இருந்துள்ள விசயம் தற்போது வெளியாகியுள்ளது.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஒரு பெண்ணை 9 ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் காதலித்து வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு தன் காதலியை அம்மாவிடமும் அறிமுகம் செய்து வைக்க வீட்டிற்கு கூட்டிச்சென்றிருக்கிறார். அங்கு புடவையில் வராமல் ஜீன்ஸ் பேண்ட்டில் வந்தது விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம்.
அதோடு காதலிக்கும் அம்மாவிற்கும் இடையே செட்டாகவில்லை என்பதாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட அட்ஜெஸ்ட் செய்து கொள்ளமாட்டாராம். இதனால் இருவரும் சுமூகமான உறவு இல்லாத காரணத்தில் தான் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டோம் என்று விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறாராம்.