மகன் எங்க இருக்காருன்னு கூட தெரியல! ஹைதராபாத்தில் இருக்கும் விஜய்க்கு கால் செய்த ஷோபா அம்மா!!

Vijay Varisu S. A. Chandrasekhar
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராக இருந்து 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகவுள்ள வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி அஜித்தின் துணிவுடன் மோதவுள்ளது. சினிமாவில் இப்படி கொடிக்கட்டி பிஸியாக இருந்தாலும் தன் பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பதாக சில விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்படுகிறது.

அம்மாவின் பிறந்தநாள் மற்றும் பெற்றோர்களின் திருமண நாளில் செய்த பூஜைக்கு கூட அவர்களை சந்திக்காமல் இருந்து வந்துள்ளார் விஜய். இதனையடுத்து தன் மகன் மாதத்தில் ஒரு முறையாவது எங்களை சந்தித்து ஒருநாள் செலவழிக்க வேண்டும் என்ற ஆதங்கமும் இருக்கிறது என்று பேட்டியில் கூறியிருந்தார் எஸ் ஏ சந்திரசேகரும் அவரது மனை ஷோபாவும்.

விஜய்யின் அம்மா ஷோபா

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு சிறப்பு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் அம்மா ஷோபா விஜய்க்கு கால்செய்து பேசியிருக்கிறார். அப்போது எங்க ஜோ இருக்க நான் பொங்கல் செய்திருக்கிறேன், உனக்கு பிடித்ததால் செய்துள்ளேன்.

எங்க இருக்கன்னு தெரிந்தால் அங்கே கொண்டு வருகிறேன் என்ற நினைத்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் நான் ஹைதராபாத்தில் இருப்பதாக விஜய் கூறியிருக்கிறார்.

இதனை தன் மகன் எங்கே இருக்கிறார் என்று கூட அம்மாவுக்கு தெரியாத சூழ்நிலையை விஜய் கொடுத்துள்ளார் என்று பலர் கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்கள்.