தீபிகா, பிரபாஸை தூக்கி ஓரம் கட்டிய சமந்தா, விஜய்! எல்லாம் இதுதான் காரணம்?
இந்திய சினிமாவில் சமீபகாலமாக பாலிவுட் சினிமா படங்களின் தோல்வியால் தென்னிந்திய படங்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்படி இந்தியளவில் மிகவும் பிரபலமானவர்கள் லிஸ்ட்டில் முதலில் பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் தான் முதல் இடத்தில் இருப்பார்கள்.
அப்படி இருந்த காலம் மாறி தற்போது தென்னிந்திய நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகருத்து வருகிறது. பல ஆண்டுகளாக சினிமா நட்சத்திரங்களின் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
தற்போது ஜூன் மாதத்தில் யார் யார் எந்த இடத்தினை பெறுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நடிகர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தினை பிடித்துள்ளார் நடிகர் விஜய்.
அவருக்கு அடுத்து பிரபாஸ், யாஷ், அல்லுஅர்ஜுன், ஜூனியர் என் டி ஆர், அக்ஷய்குமார், மகேஷ்பாபு, அஜித்குமார், ராம் சரண், சூர்யா போன்றவர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் 3 தமிழ் நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்.
Ormax Stars India Loves: Most popular male film stars in India (June 2022) #OrmaxSIL pic.twitter.com/FTfxEaXkK8
— Ormax Media (@OrmaxMedia) July 20, 2022
அதேபோல் நடிகைகளின் லிஸ்ட்டில் ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி நடிகை சமந்தா முதல் இடத்தினை பிடித்துள்ளார். இதற்கு காரணம் சமந்தா பாலிவுட்டில் நடிக்க கமிட்டாகியது முதல் பல விசயங்கள் சமந்தாவை பற்றி மீடியாக்களில் பேசப்பட்டது தானாம்.
Ormax Stars India Loves: Most popular female film stars in India (June 2022)@advani_kiara enters the top 10 list for the first time #OrmaxSIL pic.twitter.com/nAWpNKX9co
— Ormax Media (@OrmaxMedia) July 20, 2022