திருமணம் ஆகாத 40 வயது நடிகையை 6வது முறையாக அழைத்த நடிகர் விஜய்.. ஓடிவந்த நடிகை
விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் குத்து பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது.
இதில் பிரபல நடிகை திரிஷா நடனமாடியுள்ளாராம். கடைசியாக விஜய் நடித்த லியோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த திரிஷா, Goat படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
ஏற்கனவே ஷாருக்கான் படத்தில் குத்து பாடலுக்கு ஆட நடிகை திரிஷாவை கேட்டுள்ளனர். ஆனால், ஷாருக்கான் படத்திற்கு நோ என கூறிவிட்டாராம். அப்படியிருக்கையில் தற்போது விஜய் படத்தின் பாடல் காட்சிக்கு மட்டும் நடனமாடியுள்ளாரே அது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி மற்றும் லியோ என ஐந்து படங்களில் விஜய்யுடன் பயணித்த திரிஷா, தற்போது 6வது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video