மூத்த நடிகரை அந்த வார்த்தை சொல்லி திட்டிய விஜய்.. இப்படி பண்ணலாமா தளபதி
Vijay
By Kathick
தமிழ் சினிமாவில் தீர்க்கப்படாத பல சண்டைகள் உள்ளன. அதில் ஒன்று தான் நடிகர் விஜய் மற்றும் நடிகர் நெப்போலியன் இடையே நடந்த சண்டை. ஆம், போக்கிரி படத்தின் படப்பிடிப்பின் போது தனது நண்பர்களுடன் நடிகர் விஜய்யை பார்க்க விஜய்யின் கேரவனுக்கு சென்றுள்ளார் நெப்போலியன்.
அப்போது கேரவன் வாசலில் இருந்த விஜய்யின் உதவியாளர் நெப்போலியனை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் உதவியாளருடன் நெப்போலியன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு வெளிய வந்த விஜய் யார் பக்கம் தப்பு இருக்கிறது என்று கூட கேட்காமல் உடனடியாக தன்னுடைய மூத்த நடிகர் என்று பார்க்காமல் நெப்போலியனை தவறான வார்த்தை சொல்லி திட்டியுள்ளார்.
இதனால், விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதை இன்று வரை நெப்போலியன் மறக்கவில்லை என்று அவரே கூறியுள்ளார்.