சங்கீதாவுடன் பிரிவு.. அம்மாவுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்த விஜய்!! என்ன தெரியுமா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து கமிட்டாகிய அவரது 69வது படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழு அரசியல் வேலைகளில் ஈடுபட இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து பல வேலைகளை செய்து வரும் விஜய்யை பலர் இதுபற்றி பேசி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சங்கீதாவுடன் பிரிவு, பெற்றோரை கண்டுக்கொள்வதில்லை, நடிகைகளுடன் திருமணம் என்று பல செய்திகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு விசயத்தை செய்து முடித்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் சாய் பாபா கோவிக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால் விஜய் நின்று எடுத்த அந்த சாய் பாபா கோவில் அவர் கட்டியதாம்.
கொரட்டூரில் இருக்கும் விஜய்க்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய தாய் ஷோபாவிற்காக சாய் பாபா கோவில் கட்டியிருக்கிறார். சாய் பாபா கோவிலின் கும்பாபிஷேம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமீபத்தில் வைரலாகி இருக்கிறது.
You May Like This Video

