அந்த நடிகையுடன் திருமணமா!! எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டா..
சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் ரகசியமாக வைத்திருக்கும் பல விசயங்கள் வெளியில் எப்படியாவது கசிந்து அவர்களின் பெயரையே உடைத்துவிடும்.
சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக பல காலமாக பேசி வருகிறார்கள். இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றாலும் ரகசியமாக மாலத்தீவு, பார்ட்டி என்று சுற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவர்களின் காதல் பேச்சு தீவிரமடைந்து வந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக செய்திகள் கசிந்து தீயாக பரவி வருகிறது.
இதையறிந்த நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவை நான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக வெளியாக தகவல் உண்மை இல்லை என்றும் நான் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமணம் செய்து கொள்வேன் என ஊடகங்கள் நினைக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வதந்தி செய்திகளால் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள் என்றும் விஜய் தேவரகொண்டா பதிலடி கொடுத்திருக்கிறார்