ரஜினி படத்தில் வாய்ப்பு கேட்ட தளபதி! ஆசையை நிறைவேற்றாமல் வேண்டாம் கூறிய இயக்குநர்.. REWIND

vijay thalapathy rajinikanth padaiyappa superstarrajini
By Edward Sep 03, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாகவும் வருங்கால சூப்பர் ஸ்டாராகும் திறமை இருக்கு என்று கூறுமளவிற்கு உயர்ந்து இருப்பவர் நடிகர் விஜய். தற்போது இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக தற்போது வரை இருக்கும் தளபதி விஜய், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம். இதை ஒரு மேடையில் தெரிவித்த விஜய், படையப்பா படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் பேசினாராம்.

ஆனால், விஜய்க்கு அந்த நேரத்தில் சோலோ படம் நல்ல வெற்றியை கண்டு வந்ததால், அப்படத்தில் நடிக்க சிக்கல்கள் வரும் விஜய்க்கு என்று வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இனி வரும் காலத்தில் விஜய்க்கு இந்த ஆசை நடக்குமா? என்ற கேள்வி கேள்விகளாகவே இருந்து வரும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.