தணிக்கை சான்றிதழ் பிரச்சனை..விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளி வைப்பு
Vijay
Gossip Today
JanaNayagan
By Edward
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் kvn நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி உள்ளது ஜனநாயகன் படம்.
9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படாமல் இருப்பதால் படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த உயர் நீதிமன்ற விசாரணையில் பட வெளியீட்டின் தீர்ப்பு 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆகுவதில் ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் படம் 9 ஆம் தேதி வெளியாகாது என்றும் மறு அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.