46 வயது நடிகையுடன் இணைகிறாரா நடிகர் விஜய்.. அட இவங்களா

Vijay Manju Warrier H. Vinoth
By Kathick Sep 28, 2024 03:40 AM GMT
Kathick

Kathick

Report

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கோட். இப்படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படம், அதாவது தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஹெச். வினோத் இயக்க, கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கப்போகிறவர்கள் யார் யார் என்பது குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறன்றன.

46 வயது நடிகையுடன் இணைகிறாரா நடிகர் விஜய்.. அட இவங்களா | Vijay Joining Hands With Manju Warrier

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், பிரபல நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்துள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 46 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் தமிழில் அசுரன், துணிவு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன் படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

46 வயது நடிகையுடன் இணைகிறாரா நடிகர் விஜய்.. அட இவங்களா | Vijay Joining Hands With Manju Warrier