விஜய்க்கு லிப்லாக் கொடுத்தது உண்மை தான்!! ஆனா தமிழ்நாட்டுல.. ஷாக்கான பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் வேலைகளில் மும்முரமாக வேலை செய்து வருகிறார்.
சமீபகாலமாக கோட் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை சந்தித்தும் அவர்களுடன் புகைப்படம் எடுத்தும் அவர்கள் போடும் மாலைகளை போட்டுக்கொண்டும் வருகிறார்.
சமீபத்தில் கேரளாவில் ரசிகர்களை பார்க்க வந்த போது விஜய்யை கட்டியணைத்து எதிர்ப்பாராத விதமாக ஒருவர் முத்தம் கொடுத்திருக்கிறார். இதுபற்றி பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு பேட்டியொன்றில், விஜய்க்கு கேரளாவில் பெரிய செல்வாக்கு இருப்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன்.
கடைசியாக காவலன் படத்தில் 16 வருடத்திற்கு பின் கேரள ரசிகர்களை பார்த்திருக்கிறார் நடிகர் விஜய். கேரளாவில் விஜய் படம் அதிக விலைக்கு போகும். திடீரென அப்படியொரு கூட்டம், அதுவும் சாப்பிட ஊட்டுகிறார் என்று நினைத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் அளவிற்கு இருந்தது.
ஆனால் பாவம், இவங்ககிட்ட வந்து சிக்கிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கு நடந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதில் அவரை தொட்டுவிட முடியாது, கண்டுபிடித்து அடித்து இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அது அவர் இல்லை வேறு ஒரு நடிகர் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.