தயாரிப்பாளரை அசிங்கப்படுத்தினாரா தளபதி விஜய்! லோகேஷ் கனகராஜ் தான் காரணமா?

lalith vijay master thalapathy logeshkanagaraj thalapathy67
By Edward Mar 05, 2022 05:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சனின் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ளது என்று படக்குழு தெரிவித்திருந்தனர்.

அது ஒரு பக்கம் இருக்க தளபதியின் அடுத்த 66, 67 படத்தில் எந்த இயக்குனர் சேர்வார் என்ற கேள்வி தான் எழுந்தது. அதற்கு விடை கொடுக்க விஜய் 66 படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் என்றும் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து தளபதி 67-க்கு மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜே இணையவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் வீட்டிற்கு சென்று முழு கதையையும் கூறியிருக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பு யார் என்று கேட்கையில் மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் இருப்பாரோ என்று கேள்வி எழுந்தது. ஆனால் அவரின் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லை என்றும் விஜய்க்கும் தயாரிப்பாளர் லலித்திற்கு மன கஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

என்ன பிரச்சனை லோகேஷ் கனகராஜ் இதுபற்றி என்ன சொன்னார் என்ற விவரமும் வெளியாகவில்லை.