திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து.. ஆளே அடையாளம் தெரியாமல் போன விஜய் பட நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் காதலை மையப்படுத்தி ஈர்க்கப்பட்ட படங்களில் நடித்து தற்போது மாஸ் நடிகராக மாறி நடித்து வருகிறார். அப்படி விஜய்யின் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளியான படம் மின்சார கண்ணா.
விஜய், ரம்பா, குஷ்பு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மோனிகா காஸ்ட்லினா. இந்தியில் அறிமுகமாகி விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதன்பின் வாய்ப்பில்லாமல் இந்தி பக்கமே சென்று கவர்ச்சி நடிகையாகவும் நடித்து வந்தார். இதன்பின் வாய்ப்புகள் கிடைக்காமல் திணறிய மோனிகா சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2010ல் சத்யபிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து ஒரே அண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்தாகி மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒருசில சீரியல்களில் நடித்து கவர்ந்து வரும் மோனிகா ஆள் அடையாளம் தெரியாமல் மாறி 4 வருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

