திடீரென விஜய் பட பாடல்களுக்கு போடப்பட்ட தடை... ரசிகர்கள் ஷாக்

Vijay Tamil Cinema Tamil Actors
By Yathrika Mar 18, 2026 11:00 AM GMT
Report

நடிகர் விஜய்

சினிமாவில் நாயகனாக என்ட்ரி கொடுத்து கோடான கோடி ரசிகர்களின் ஆசை நாயகனாக வலம் வருபவர் விஜய்.

இவரத கடைசிப்படமான ஜனநாயகன் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சந்தித்து வருகிறது, இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. விஜய்யோ, உங்கள் விஜய் உங்கள் விஜய் வரேன் நான் என அரசியலில் களமிறங்கி அந்த வேலைகளில் செம பிஸியாக இருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ பிரச்சனைக்காக அடிக்கடி டெல்லி சென்றும் வருகிறார், தமிழகத்தில் கட்சி வேலைகளையும் கவனித்து வருகிறார். 

திடீரென விஜய் பட பாடல்களுக்கு போடப்பட்ட தடை... ரசிகர்கள் ஷாக் | Vijay Movie Songs Banned At Government Schools

இந்த நிலையில் திடீரென விஜய் பட பாடல்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது அரசு. 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாவில் தவெக தலைவர் விஜயின் திரைப்பட பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.