கோடிக்கணக்கில் செலவு செய்த புதிய வீடு வாங்கிய விஜய்.. ஆனால், அவர் அங்கு தங்கப்போவதில்லையாம்

Vijay Sangeetha Vijay
By Kathick Aug 28, 2022 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை முடித்தகையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடி என தெரிவிக்கின்றனர். அந்த ஆடம்பர பிளாட்டை தனது அலுவலகமாக பயன்படுத்த விஜய் முடிவு செய்து உள்ளாராம். அதே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் ஆர்யாவும் ஒரு பிளாட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.