எவ்வளவோ பிரச்சனை, டார்ச்சர்..அதையெல்லாம் தாங்கிய மனைவி!! விஜய் தந்தை எமோஷ்னல்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர், தன்னுடைய மகன் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அறிமுகம் செய்தார். தற்போது தளபதி விஜய்-ஆக எஸ் ஏ சந்திரசேகரின் பங்கு மிகப்பெரியளவில் உதவியிருக்கிறது.
அப்படிப்பட்ட தந்தையை விஜய் கண்டுக்கொள்வதில்லை என்றும் அவருடன் ஏற்பட்ட சில சிக்கலால் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறி செய்திகள் வெளியாகியது.
தன் மனைவி சோபாவுடன் சென்னையில் வசித்து வரும் எஸ் ஏ சி, தன் மகன் விஜய்யின் தவெக கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
52 ஆம் ஆண்டு திருமண நாள்
இந்நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் - சோபா தம்பதியினர், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி 52-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
தற்போது தன் மனைவி சோபாவுக்கு திருமணநாள் பரிசாக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். ஷோரூமில் கார் டெலிவரி எடுத்த வீடியோவை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
…true love is never blind, but rather brings an added light. pic.twitter.com/bSJ9lQ6DPg
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
WEDDING ANNIVERSARY GIFT FOR MY LOVE♥️ pic.twitter.com/FCCaXbnIqo
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025