என்னை போன்று நடிக்காதே.. நீண்டகால நண்பரிடம் விஜய் இப்படி சொன்னாரா?

Vijay Tamil Cinema Sanjeev Venkat
By Bhavya Jul 15, 2025 09:30 AM GMT
Report

 விஜய் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் முடிவு பொறுத்து தான் அவர் சினிமாவில் நடிப்பாரா, இல்லையா? என்பது குறித்து தெரியவரும்.

என்னை போன்று நடிக்காதே.. நீண்டகால நண்பரிடம் விஜய் இப்படி சொன்னாரா? | Vijay Said Not To Act Like Him

கண்டிஷன்! 

இந்நிலையில், விஜய்யின் நீண்டகால நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் வெங்கட், விஜய் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.

அதில், " விஜய் என்னிடம் டேய், நீ தினமும் டிவியில் வருகிறாய். என்னை போல நடித்து கொண்டு இருக்கிறாய். டயலாக் பேசும்போதும் கூட அதே இடத்தில் நிறுத்தி பேசுகிறாய்.

அப்புறம் நான் உன்ன மாதிரி பண்றேனா, நீ என்னை போன்று செய்கிராய்யா என்று எனக்கே சந்தேகம் வந்துரும். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு வாட்டிதான் ஸ்க்ரீனில் வருவேன்' என்று விஜய் சொன்னார்.

ஆனால், நான் வேண்டுமென்றே அவ்வாறு நடிப்பதில்லை, அது எனக்குள்ளேயே இருக்கும் பாதிப்பு. எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை" என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார். 

என்னை போன்று நடிக்காதே.. நீண்டகால நண்பரிடம் விஜய் இப்படி சொன்னாரா? | Vijay Said Not To Act Like Him