GOAT படத்தால் பயந்துபோன விஜய்! காரணம் என்ன?
Vijay
Greatest of All Time
By Karthick Raja
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ படத்தின் முதல் பாதி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தின் இரண்டாம் பாதி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனாலேயே இப்படம் விமர்சன ரீதியாக தோல்வி என கூறுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் GOAT படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளியதாக தகவல் வெளிவந்தது.

இது GOAT படத்தின் மீது பலருக்கும் நம்பிக்கையையும் வரவழைத்துள்ளது. இந்த நிலையில், GOAT படத்தை பார்த்துவிட்டு இயக்குனரை புகழ்ந்த நடிகர் விஜய், சற்று பயந்துபோயுள்ளாராம்.
இதனால் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் புகழ்ச்சியை மட்டும் தெரிவிக்காமல், இப்படத்தை அனைவரும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள், கவனமாக பார்த்து பண்ணுங்க என கூறினாராம் நடிகர் விஜய்.