வாய்ப்புக்காக நயன்தாரா திருமணத்தை யூஸ் பண்ண விஜய் சேதுபதி!! வில்லனாக்கிய சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்று புகழப்பட்டு வரும் விஜய் சேதுபதி பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதி எப்படி ஷாருக்கான் படத்தில் கமிட்டான தகவல் வெளியாகியுள்ளது. கொரானா காலக்கட்டத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டில் இருந்து தான் படப்பிடிப்பு தீவிரமாக ஆரபிக்கப்பட்டது.
கதாநாயகிகளின் தேர்வே கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தான் நடிகை நயன் தாரா ஜோடி என்று உறுதியானது. அப்படியிருக்கும் போது ஜூன் மாதம் 2022ல் நடைபெற்ற நயன் - விக்கி திருமணத்தில் நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார்.
திருமணத்திற்கு அட்லீ மற்றும் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர். அப்போது ஷாருக்கானை விஜய் சேதுபதி பார்த்த நேரத்தை வீணடிக்காமல் தன் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதாவது, உங்கள் படத்தில் உங்களுக்கு வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது ஜி என்று தெரிவித்துள்ளார். உடனே ஷாருக்கான், அட்லீயிடம் எனக்கு வில்லனாக்கிவிடலாமா என்று கேட்டிருக்கிறார்.
நீங்க சொல்லி மறுபேச்சி ஏது ஜி என்று கூறி விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க கமிட் செய்திருக்கிறாராம் அட்லீ. ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.