கமல் செய்த விஷயத்தை பிக் பாஸில் செய்யாத விஜய் சேதுபதி.. என்ன தெரியுமா

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Oct 17, 2024 11:30 AM GMT
Kathick

Kathick

Report

கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், 8வது சீசன் வந்த நிலையில், அவர் திடீரென இதிலிருந்து விலகினார்.

கமல் ஹாசனுக்கு பதிலாக யார் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.

கமல் செய்த விஷயத்தை பிக் பாஸில் செய்யாத விஜய் சேதுபதி.. என்ன தெரியுமா | Vijay Sethupathi Not Promoted Rummy In Bigg Boss

முதல் வாரத்தில் அனைத்து போட்டியாளர்களையும் விஜய் சேதுபதி வச்சு செய்தது படுவைரலானது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர்ஸை மட்டும் தான் சொல்வேன் மற்ற அனைத்து ஸ்பான்சர்ஸ்களையும் சொல்ல மாட்டேன் என்று விஜய் சேதுபதி அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதல் ஸ்பான்சர்ஸ்களில் ரம்மி சர்க்கிலும் இருப்பதால் தான், அவர் அதை சொல்ல மறுக்கிறார் என்று இதனை காரணமாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய போது இந்த ரம்மி விளம்பர ஸ்பான்சரை கூறியதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.