17 வயதில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை! அவரா வேண்டாம் என ஒதுங்கும் பிரபல நடிகர்..

tollywood vijaysethupathi krithishetty uppena
By Edward Sep 08, 2021 03:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தும் பல படங்களில் கமிட்டாகி கையிருப்பாக வைத்து பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் லாபம் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து விஜய் சேதுபதி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க ஒப்பந்தம் செய்யதுள்ளனர். இதையறிந்த விஜய் சேதுபதி வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் தெலுங்கு படமான உப்பென்ன படத்தில் விஜய் சேதுபதிக்கு மக்ளாக கீர்த்தி செட்டி நடித்திருப்பார். எனக்கு மகளாக நடித்திருப்பதால் என்னால் அவருடன்ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.