பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா! கமல் ஹாசனை விட குறைவு

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss
By Kathick Sep 09, 2024 08:30 AM GMT
Kathick

Kathick

Report

தான் விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் இருந்து உலகநாயகன் கமல் ஹாசன் வெளியேறிவிட்டார்.

கமல் ஹாசன் இடத்திலிருந்து யார் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என கேள்வி எழுந்த நிலையில், சூர்யா, விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பலருடைய பெயர்களும் இதில் கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா! கமல் ஹாசனை விட குறைவு | Vijay Sethupathi Salary For Bigg Boss Season 8

இறுதியாக நடிகர் விஜய் சேதுபதியை தொகுப்பாளராக கமிட் செய்துள்ளனர். சமீபத்தில் தான் லான்ச் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக விஜய் சேதுபதி தான் புதிய தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வாங்கவுள்ள சம்பளம் ரூ. 50 கோடி என சொல்லப்படுகிறது. இதற்கு முன் தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் ரூ. 120 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் என தகவல் தெரிவிக்கின்றனர்.