அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் சேதுபதி! வைரலாகும் துக்ளக் தர்பாரின் டிரைலர்
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது மாதத்திற்கு 4 படங்களை வெளியிடும் அளவிற்கு மக்கள் செல்வனாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.
பிட்சா உள்ளிட்ட பல படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களால் சூப்பர் ஹிட் கொடுத்து இந்த இடத்தில் நிற்கிறார். படங்களை தாண்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வரும் விஜய் சேதுபதி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3 படங்களை தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார். கையில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொடுத்தும் வருகிறார்.
சில தினங்களுக்கு முன் அனபெல் விஜய்செதுபதி படத்தின் டிரைலரை வெளியிட்டு ஷாக் கொடுத்த அடுத்த நாளே துக்ளக் தர்பார் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். அரசியலை மையமாக வைத்து விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன், சத்யராஜ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.