பொய்க்கு ஏன் பதிலளிக்க வேண்டும்!! 500 விஷயத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி மகன் சூர்யா..

Vijay Sethupathi Tamil Actors
By Edward Oct 23, 2024 01:30 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

விஜய் சேதுபதி மகன் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா வளர்ந்து ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜைக்கு கூட விஜய் சேதுபதி வரவில்லை.

பொய்க்கு ஏன் பதிலளிக்க வேண்டும்!! 500 விஷயத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி மகன் சூர்யா.. | Vijay Sethupathy Son Surya Clarifies False News

ரூ.500

இந்நிலையில் சூர்யா தன் தந்தை ஒரு நாளைக்கு ரூ.500 மட்டுமே தன் செலவுக்கு கொடுப்பதாகவும் தான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறியதாக தகவல் பரவியது.

இதை நெட்டிசன்கள் சூர்யாவை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அப்படியொரு செய்தியை சூர்யா கூறவில்லை என்பதே நிதர்சனம்.

சூர்யாவின் புகைப்படத்துடன் இவ்வாறு போலியான தகவல் பரவி வருகிறது என்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் பொய்க்கு எதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சூர்யாவின் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.