எப்படியோ சல்லடை போட்டு தேடி புடிச்சிட்டாப்ல விஜய் மகன்.... அப்பாடா ரெடி ஸ்டார்ட்

Vijay Tamil Cinema jason sanjay
By Yathrika Sep 10, 2024 09:30 AM GMT
Report

ஜேசன் சஞ்சய்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் களமிறங்குவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. 

அப்படி தமிழ் சினிமாவையே ஏன் இந்திய சினிமாவில் பல மொழிகளிலும் ராஜ்ஜியம் செய்யும் நடிகர் விஜய்யின் மகன் சினிமாவில் நாயகனாக அறிமுகமாவார் என்று பார்த்தால் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். 

அவர் இயக்கப்போகும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது எல்லாம் எப்போதோ வந்த விஷயம். 

அறிவிப்பு வந்ததில் இருந்து ஜேசன் சஞ்சய் தனது படத்திற்காக நாயகன் வேட்டை நடத்தியுள்ளார், எந்த பக்கம் போனாலும் இல்லை, வேண்டாம் என்ற பதில் தான் வந்திருக்கிறது. 

இப்போது ஒருவழியாக சல்லடை போட்டு தேடி தனது முதல் படத்தின் நாயகனாக சுதீப் கிஷனை தேர்வு செய்துள்ளார். இனி என்ன ஷுட்டிங் தான், ரெடி ஸ்டார்ட்....

எப்படியோ சல்லடை போட்டு தேடி புடிச்சிட்டாப்ல விஜய் மகன்.... அப்பாடா ரெடி ஸ்டார்ட் | Vijay Son Jason Sanjay First Movie Hero