இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க! மகனை திட்டினாரா விஜய்.. பின்னணியில் இந்த நடிகையா..

Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Aug 27, 2024 12:30 PM GMT
Report

பல வதந்திகள்

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளேன் என்று கூறியதில் இருந்து அவர் பற்றிய பல வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் விஜய் அரசியலில் நுழைவது அவருக்கு பிடிக்காததால் தன் தந்தை வீட்டிற்கே சென்றதாகவும் ஒரு தகவல் வைரலாகியது.

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க! மகனை திட்டினாரா விஜய்.. பின்னணியில் இந்த நடிகையா.. | Vijay Son Jason Sanjay Issue For Actress In House

அதேபோல் நடிகை திரிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் குறித்த ஒரு செய்தித்தாள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய், லியோ பட நடிகை திரிஷாவை வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன் கூட்டிச்சென்றதாகவும், சென்னை வந்த மகன் சஞ்சய் அதை பார்த்து விஜய்யை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மகனை திட்டினாரா விஜய்

இது என் வீடு யார் வேண்டுமானாலும் வருவார்கள். அதைக்கேட்க நீ யார் என்று ஆக்ரோஷமாக பேசியிருக்கிறாராம். அப்போது வீட்டைவிட்டு வெளியேறிய மகன் தொடர்பு எல்லைவிட்டே சென்றுவிட்டாராம். இதனை கண்டித்த எஸ் ஏ சந்திரசேகரையும் விஜய் முறைத்திருக்கிறாராம்.

இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க! மகனை திட்டினாரா விஜய்.. பின்னணியில் இந்த நடிகையா.. | Vijay Son Jason Sanjay Issue For Actress In House

இதற்கெல்லாம் காரணம் விஜய் உதவியாளர் ஜெகதீஷ் தான் என்றும் அவரை வேலையை விட்டு துரத்த பிளான் போட்டதாகவும் தெரிகிறது. இதனை பழிவாங்க தான் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்க சபதம் போட்டுள்ளார்.

இதை மனைவி சங்கீதாவும் உடன் இருந்து பார்த்து வருகிறாராம். இதனால் தான் விஜய்யின் அரசியல் பயணத்தில் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு : இவை அனைத்தும் ஒரு செய்தித்தாளில் வந்தது போல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர், ஒரு சிலர் இதை எடிட் என்றும் கூறி வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery