இயக்குநரா? நடிகரா? விஜய் மகன் சஞ்சயின் ஆசை இதுதானாம்! தாத்தா கூறிய உண்மை

vijay thalapathy sanjay sachandrasekar tamilactor
By Edward Aug 26, 2021 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் உச்சகட்ட நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் பிகில், மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வரும் நேரத்தில் தளபதி 66 படத்தின் இயக்குநராக வம்சி பெயர் வெளியானது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகவுள்ளதால் அப்படத்தின் சம்பளமாக வருமான வரியை சேர்ந்து 120 கோடி என்று கூறப்பட்டது. தற்போது விஜய் மகன் டைரக்‌ஷன் சம்பந்தமான பட்டப்படிப்பினை வெளிநாட்டில் படித்து வருகிறார். அகஸ்ட் 26ல் தளபதி விஜய்யின் மகண் ஜெய்சன் சஞ்சய் பிறந்தநாளாகும். அன்று அவரது தாத்தாவும் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் பிரபல இணையதளத்தில் பேசியுள்ளார்.

அதில் சஞ்சய் இயக்குநராக ஆசைபடுகிறாரா நடிகராக ஆசைப்படுகிறாரா என்ற கேள்விக்கு, சஞ்சய் இயக்குநர் சம்மந்தமான படிப்பை படித்து வருவதால் இயக்கத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய்க்கு தளபதி போன்று சஞ்சய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டுள்ளனர். என்னுடைய அன்பான பேரன் ஒன்றுதான் அது வரும் போதுதான் வரும் இயக்குநராக எதாவது அறிவுரை கூறவில்லை இப்போது வேண்டாம் என்று கூறியுள்ளார்.