பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!..இயக்குனர் நெல்சன் உருக்கம்

Vijay Nelson Dilipkumar
By Dhiviyarajan Aug 13, 2023 01:00 AM GMT
Report

பீஸ்ட்

கடந்த ஆண்டு 2022 -ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால் நெல்சனை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!..இயக்குனர் நெல்சன் உருக்கம் | Vijay Speak About Beast Failure

விஜய் கொடுத்த ரியாக்ஷன்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் , பீஸ்ட் படம் எடுத்தோம். சில பேருக்கு புடிச்சிருக்கு, சிலர் பேருக்கு புடிக்கல. அவ்ளோதான் எல்லாம் முடிந்தது. இனி அடுத்த படம் பண்ணும் போது பாத்துக்கலாம் என்று விஜய் சார் என்னிடம் சொன்னார்.

அப்போது நான் அவரிடம் சார் என் மேல கோபம் எதும் இருக்க என்று கேட்டேன். அவர் அதற்கு யோவ் என்று சொல்லி சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரே எனக்கு போன் செய்து அப்போ எனக்கும் உனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் மட்டும் தானா. நீ கேட்டது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொன்னார்.

சமீபத்தில் கூட ஜெயிலர் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்த பின் விஜய் சார் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் என நெல்சன் பேட்டியில் கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்!..இயக்குனர் நெல்சன் உருக்கம் | Vijay Speak About Beast Failure