என்ன பேசினார்னு யாருக்கும் புரியல..கமலை விஜய் தோற்கடித்துவிட்டார்... செல்லூர் ராஜு
தவெக விஜய்
தவெக தலைவர் தளபதி விஜய் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்ட முறையில் நடத்திமுடித்தார்.
பல கோடி செலவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தளபதி பேசியதை கொண்டாடினார்கள் என்று கூறப்பட்டது.
மாநாட்டில் முதன்முதலாக பேசிய விஜய், கொள்கைகள் முதல் 2026 தேர்தல் வரையிலான நடவடிக்கைகள் குறித்து விஜய் காரசாரமாக பேசியிருந்தார்.
செல்லூர் ராஜு
இதற்கு பலரும் ஆதவளித்த நிலையில் பலர் விஜய்யின் பேச்சை விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள். அந்தவகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, விஜய் பேச்சை கேட்டு ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
கமல் மாதிரியெல்லாம் இல்லாமல் விஜய் நன்றாகவே பேசினார். மதுரையில் அவர் நடத்திய முதல் மாநாட்டில் என்ன பேசினார் என்பது யாருக்கும் புரியவில்லை. அந்த விஷயத்தில் கமலை விஜய் தோற்கடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் என்று கலாய்த்தபடி செல்லூர் ராஜு பேசியிருக்கிறார்.