15 வயதில் திருமணம்..விவாகரத்து பெற்று இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாரு!! பாக்யலட்சுமி செல்வியின் மறுப்பக்கம்...
பாக்யலட்சுமி செல்வி
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கடந்த 5 வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்று வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த சீரியலில் செல்வி ரோலில் வேலைக்கார பெண்ணாக நடித்து பிரபலமான நடிகை கம்பம் மீனா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
15 வயதில் திருமணம்
அதில், 15 வயதில் எனக்கு என் தாய் மாமனுடன் திருமணம் நடந்துவிட்டது. பின் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். பின் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
2004ல் என் அம்மா கேன்சரால் இறந்துவிட்டார். அவர்களுடைய பெரிய கவலையே நான் தான். அம்மாவிற்கு 15 வயதில் திருமணம் நடந்தது, 22 வயதாக இருக்கும் போது அப்பா இறந்துவிட்டார்.
விதவையாக தன்னந்தனியாக வாழ்ந்து மிகவும் கஷ்டப்பட்டு என்னையும் என் அக்காவையும் வளர்த்தார்கள். எனக்கும் அதே மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டதே என நினைத்து அம்மா மன வேதனையில் இருந்து அதோடு உயிரிழந்துவிட்டார்.
பின் நான் வேறு வழியில்லாமல் 2009ல் சீரியல் நடிக்க வந்துவிட்டேன். என் மகன்களை ஹாஸ்டலில் படிக்க வைத்து அவர்களுக்காக வாழ்ந்து வருகிறேன் என்று கம்பன் மீனா தெரிவித்துள்ளார்.