முடிவு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. உச்சகட்ட கவலையில் ரசிகர்கள்

Serials Tamil TV Serials
By Karthick Raja Jun 10, 2026 03:30 AM GMT
Report

தமிழ் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சூப்பர்ஹிட் சீரியல்களில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒளிபரப்பு தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி. தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் வாழ்க்கை போராட்டமே இந்த சீரியலின் கதை.

முடிவு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. உச்சகட்ட கவலையில் ரசிகர்கள் | Vijay Tv Blockbuster Serial Going To End

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 800-க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பல லட்சம் பேர் உள்ளனர்.

இந்த நிலையில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மகாநதி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இது மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு உச்சகட்ட கவலையை கொடுத்துள்ளது.

முடிவு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. உச்சகட்ட கவலையில் ரசிகர்கள் | Vijay Tv Blockbuster Serial Going To End