விஜய்க்கு போட்டியாக விஜய் டிவி பிரபலம் செய்த காரியம்.. லிஸ்ட்ல முதல் இடமே விஜே பிரியங்கா தான்..

Vijay Priyanka Deshpande
By Edward Sep 03, 2022 08:44 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் தான் முதல் இடம்.

அப்படி பீஸ்ட் படத்தில் 120 கோடி சம்பளமாக பெற்ற விஜய், துபாயில் 65 கோடி அளவிற்கு ஒரு பிளாட்டை வாங்கியுள்ளார். சென்னை, துபாய் என்று அவர் வாங்கும் சம்பளத்தில் பிளாட்களை வாங்கி சேர்த்து வருகிறார்.

அவர் வரிசையில் விஜய்க்கு போட்டியாக அதே பிளாட் பில்டரிடம் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களும் பிளாட் வாங்கியுள்ளர்களாம்.

விஜய் சென்னையில் வாங்கிய பிளாட்டை ஆபிஸாக பயன்படுத்த போகிறார் என்று தெரிந்ததும், விஜே பிரியங்கா, ஈரோடு மகேஷ், அரந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் வாங்கியுள்ளார்கள்.

விஜே பிரியங்கா ஒரு எபிசோட்டிற்காக 2 லட்சம் முதல் சம்பளமாக வாங்கி இந்த பிளாட்டை வாங்கி இருக்கிறார். இப்படி விஜய்க்கு போட்டியாக அனைத்து விஜய் டிவி பிரபலங்கள் பிளாட் வாங்கி வருகிறதை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.