டி.ஆர்.பியில் பிரபல தொலைக்காட்சி சீரியலை தூக்கி சாப்பிட்ட பாரதி கண்ணம்மா! ஆனால் இதுமட்டும் கிடையாதாம்..

television roja serials bharathikannamma
By Edward Aug 30, 2021 03:39 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பிக்காக பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை போட்டிகணக்கக்கில் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அதில் பிரபல சன் தொலைக்காட்சி சீரியலில் எப்போதும் முதல் 5 இடங்களை இரு சீரியலாவது பிடித்து கொடிக்கட்டி பறக்கும் அந்தவகையில் சமீபகாலமாக சீரியலில் ராஜாவாக இருந்து வருகிறது சன் தொலைக்காட்சி சீரியல்கள். ஆனால் அவர்களுக்கு போட்டியாக, விஜய் டிவியும் அதற்கு நிகராக டஃப் காம்படிசன் கொடுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாக உள்ளது. டி.ஆர்.பி என்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது அனைத்து சேனல்களும் மிக கவனமாக பார்க்கும் அதன் அடிப்படையில் தான் அந்த ப்ரோகிராம்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படும். கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா. இதையடுத்து எப்போது முதல் இடத்தில் இருந்த ரோஜா சீரியல் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது.

ஆனால், டாப் 10 வரிசையில் சன் தொலைக்காட்சியின் 6 சீரியல்கள் இடம்பிடித்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சி சீரியல் 4கும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், ஜீ தமிழ் சீரியல்கள் ஒன்றுகூட டாப் 10ல் இல்லை.