விஜய் மாநாட்டில் தலைக்காட்டாத மனைவி சங்கீதா.. மீண்டும் புகைக்கும் விவாகரத்து விஷயம்..
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு
நடிகர் விஜய், தன்னுடைய 69வது படத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அதன்பின் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அக்கட்சியின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான மக்கள் சூழ மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
விஜய்யின் முதல் மாநாட்டுக்கு அவரது பெற்றோர்கள் எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா இருவரும் முதல் இருக்கையில் அமர்ந்து விஜய் பேச்சை ரசித்தபடி பார்த்திருந்தனர்.
மனைவி சங்கீதா மிஸ்ஸிங்
இந்நிலையில், விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அவரது மனைவி சங்கீதா பங்கேற்காமல் இருந்தது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது சங்கீதாவிற்கு பிடிக்காததால் தான் மாநாட்டிற்கு பங்கேற்கவில்லையா? என்ற கேள்வியும் இருவரும் பிரிந்துவிட்டதால் தான் வரவில்லையா? என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்திருக்கிறது.
சமீபத்தில் கூட விஜய் மனைவி சங்கீதா, மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் இறுதி சடங்கிற்கில் கடைசியாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.