தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் ஏன் வாகைப்பூ!! வெளியான ரகசியம்..
நடிப்பை தாண்டி தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். முழு அரசியலில் ஈடுபடவிருக்கும் நடிகர் விஜய், இன்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சியின் கொடியை உறுதிமொழியுடன் அறிமுகபடுத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரு யானைகள் இடம் பெற்றும் நடுப்பகுதியில் வாகைப்பூவும் இடம் பெற்றிருக்கிறது. கட்சியின் கொள்கைகள் அறிவிக்கும் போது கொடிக்கான விளக்கத்தையும் அப்போது அறிவிப்பதாக அறிமுக விழாவில் விஜய் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் வாகைப்பூ கொடியில் இடம்பெற என்ன காரணம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த தலைமுறையினரின் வெற்றி என்று விஜய் கூறிய நிலையில், ”சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கிறது”.
இதை வைத்து தான் விஜய் கட்சியின் கொடியில் வாகைப்பூ-ஐ வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொடியில் வாகைப்பூ இடம்பெற என்ன காரணம் என்று விஜய், விளக்கம் அளித்தப்பின் தான் எது உண்மை என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழத்தின் தேசிய மரம் வாகைப்பூ என்பதும் குறிப்பிடத்தக்கது.
