விஜய்யை ஒழிக்க இப்படியொரு சதியா!! பின்னால் இருந்து செயல்படும் அஜித் தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் கூறப்படுபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் 11 ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் மோதவுள்ளது.

இருப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது எத்தனை தியேட்டர்கள் தங்களின் படங்களுக்கு கிடைக்கும் என்ற மோதல் நிலைவி வருகிறது. அந்தவகையில், முதல் நாள் முதல் காட்சி நேரப்பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்தின் துணிவு 11 ஆம் தேதி அதிகாலை 1 மணி காட்சியாகவும் வாரிசு அதிகாலை 4 மணி காட்சியாகவும் வெளியாகவுள்ளதாம். இதனால் விஜய் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, அதிக தொகைக்கு படத்தினை விற்று இருக்கிறேன் என்பதால் 1 மணி காட்சியை வாரிசு படத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தாராம்.
இந்நிலையில் வெளியூரில் இருந்து விநியோகஸ்தர்கள் எல்லோரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் விவாதத்தில் ஈடுபட்டு ரெண்டு படத்தினையும் 4 மணி காட்சியாக சமமாக வெளியிடலாம் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் போனி கபூர் 1 மணி அதிகாலை காட்சியை போட வேண்டும் என்று கண்டிப்பாக இருந்து வருகிறாராம். இந்நிலையில், அதிகாலை 1 மணி காட்சி குறித்து விமர்சகர் பிஸ்மி, அந்த காட்சிக்கு அரசு தரப்பில் இருந்து எப்படி அனுமதி கிடைக்கும்.
இது சட்டத்திற்கு புரம்பானதாச்சே, எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட்டுள்ளார். இப்படியொரு நிலை செல்ல, விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் தான் காரணம். விஜய்யின் சாதனையையும் விஜய்யை ஒழிக்கவும் தான் இப்படியொரு அரசியலும் சதியும் நடப்பதாக கூறியுள்ளார் பிஸ்மி.