அட்வைஸ் செய்து ரெண்டு நாள் கூட அகல!! அதுக்குள்ள வம்புக்கு இழுத்துள்ள விஜய் ரசிகர்கள்..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தினை தில் ராஜு இப்படத்தினை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்து வெளியிடவுள்ளார்.
வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார் விஜய். அப்போது போஸ்டர்களில் வார்த்தை பிரயோகத்தில் கவனமாக இருக்க வேண்டி கேட்டுக்கொண்டார்.
இன்னும் பல அறிவுரை கூறி சாப்பாடும் போட்டு அனுப்பி இருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விகள் தான் தளபதி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
அப்படியொரு எதிர்ப்பார்ப்பில் அவரது ரசிகர்கள் போஸ்டரில் செய்த செயல் தான் தற்போது டிரெண்ட்டிங்.
சமீபத்தில் வருங்கால முதலமைச்சரே, தமிழகத்தில் அரசியல் வாரிசே என்று கூறியதுடன் பிரபல கட்சிகளின் நிறத்தை வைத்து வாரிசு என்ற எழுத்தை பதித்து போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
அட்வைஸ் கூறி ரெண்டு நாள் கூட ஆகவில்லை, அதுகுள்ள இப்படி விஜய்யை வம்புக்கு இழுத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
ஏற்கனவே தியேட்டர் எண்ணிக்கை பிரச்சனை முடியாத ஒரு நிலையில் இந்த பிரச்சனையையும் இழுத்துவிட்டுள்ளனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.