பல மாதங்களுக்கு பின் வெளியில் தலைக்காட்டிய விஜய் மனைவி சங்கீதா..வைரல் வீடியோ..
விஜய் மனைவி சங்கீதா
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய் குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதிலும் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை பிரிந்து வாழ்கிறார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த சங்கீதா மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதுதான்.
இதுகுறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் இணையத்தில் உலா வருவதை அடுத்து இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் தன் தோழிகளுடன் கலந்து கொண்டார் சங்கீதா. இதனைதொடர்ந்து, பல மாதங்களாக வெளியில் வராமல் இருந்தார் சங்கீதா.
முரசொலி செல்வம் மரணம்
நேற்று அக்டோபர் 11 ஆம் தேதி கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
தற்போது சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவரின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
#recentclick Sankgeetha anni share her deepest condolences to Murasoli Selvam sir?#ThalapathyVijay #sankgeethavijay #jasonsanjay #Trending #dhivyasasha #viralvideo #armysrk_ #thalapathy #sangeethavijay #kollywood #viral pic.twitter.com/jteI3WsNLL
— armysrk_ (@armysrk_) October 10, 2024