விவாகரத்து வதந்திக்கு பின் வெளியான புகைப்படம்!! விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீடு இதுதான்

Vijay Sri Lanka Sangeetha Vijay Tamil Actors
By Edward Jul 28, 2023 07:10 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கடந்த 1999ல் இலங்கையை சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி, ஜேசன் சஞ்ஜெய் என்ற மகனையும் திவ்யா ஷாஷா என்ற மகளையும் பெற்றெடுத்தார்.

விவாகரத்து வதந்திக்கு பின் வெளியான புகைப்படம்!! விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீடு இதுதான் | Vijay Wife Sangeetha Her Srilankan House Photo

தற்போது நீலங்கரையில் இருக்கும் தன் வீட்டில் வாழ்ந்து வரும் விஜய், சமீபகாலமாக தன் மனைவியுடன் எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் எப்படி பெற்றோர்களை கவனிக்கவில்லை கைவிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு வெளியானதோ, அதேபோல் மனைவியை பிரிந்துவிட்டார் என்ற செய்திகளும் பரவியது.

வாரிசு படத்தின் ஆடியோ லான்சிற்கு சங்கீதா வராதது, விஜய்யுடன் ஏற்பட்ட சண்டை தான் என்றும் சங்கீதா வெளிநாட்டில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது.

விவாகரத்து வதந்திக்கு பின் வெளியான புகைப்படம்!! விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீடு இதுதான் | Vijay Wife Sangeetha Her Srilankan House Photo

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னை தான் இருப்பது தெரியவந்தது. மாவீரன் படத்தினை பார்க்க இயக்குனர் சங்கர் மகள் அதிதியுடன் வந்திருந்தார்.

இலங்கையில் பிறந்த சங்கீதா, அப்பா வெளிநாட்டுக்கு போனதில் இருந்து இலங்கை பக்கம் செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படம் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. யாரும் இல்லாமல் பாழடைந்து போன அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery