நடிகர் விஜயகாந்திற்கு என்ன ஆனது! தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை தான் நடக்கிறது!

dmdk vijayakanth
By Edward May 20, 2021 10:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆரம்பித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை விஜயகாந்த். படங்களை விட்டுவிட்டு தற்போது அரசியலில் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். கட்சி ஆரம்பித்து வழிநடத்திய சில ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதித்து, பேசும் திறன் குறைந்தும் எழுந்து நடக்க கஷ்டப்பட்டும் வந்தார். அதற்காக தீவிரசிகிச்சையை அமெரிக்கா, சிங்கபூர் என சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் தமிழகம் வந்து சில காலம் கட்சி பொறுப்பினை பார்த்திருந்த போது உடல்நிலை முன்னேற்றமில்லாமல் இருந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில், உடல் நிலை பாதிக்கபட்டிருந்தாலும் சட்டமன்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து ஓய்வில் இருந்த விஜயகாந்த் அவர்கள் நேற்று அதிகாலையில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார்.

அனுமதிக்கப்பட்டு 2 நாட்களாகியும், டாக்டர் தரப்பில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சைகளை டாக்டர்கள் தீவிரமாக அளித்து வருகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது விஜயகாந்த் உடல் சீராக இருப்பதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் 2 நாட்களாகியும் மருத்துவமனையில் இருப்பது தொண்டர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மியாட் மருத்துவமனையிடம் விஜயகாந்த் உடல் நிலை தகவல் பற்றி கேட்டபோது தெரிவிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.