வடிவேலுவை நடுரோட்டில் புரட்டி எடுத்த தொண்டர்கள்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய விஜயகாந்த்.. பெரிய மனுஷன்யா...

Vijayakanth Vadivelu
By Edward Sep 01, 2022 09:08 AM GMT
Report

சினிமாத்துறையில் இருந்து பின் அரசியலில் ஈடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் நடிகராக திகழ்ந்ததோடு பலருக்கு சினிமாத்துறையில் வாழ்க்கையும் கொடுத்திருக்கிறார். அதில் முக்கியமானவர் தான் வடிவேலு.

சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பளித்து முன்னேற பெரிய பங்காற்றினார் விஜயகாந்த். வடிவேலு, விஜயகாந்த் காம்போ ரசிகர்களை ரசிக்கும்படியாக அமைந்தது. இப்படி சரியாக சென்று கொண்டிருக்கும் போது வடிவேலு திமுக பக்கம் நின்று கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தை மேடையில் கண்டபடி பேசியிருக்கிறார்

வடிவேலுவை நடுரோட்டில் புரட்டி எடுத்த தொண்டர்கள்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய விஜயகாந்த்.. பெரிய மனுஷன்யா... | Vijayakanth Forgive Vadivelu Doing Bad Behaviour

இதனால் வடிவேலு வீட்டில் கல் எறிந்து கலாட்டா செய்தனர் சிலர். வடிவேலுவை நடுரோட்டில் அடித்தும் இருக்கிறார்கள் என்று நடிகர் தியாகு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். என்னை அடித்தது விஜயகாந்த் தான் என்று வடிவேலு வாய்க்கு வந்த பேசி திட்டி இருக்கிறார்.

இதுகுறித்து விஜயகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது. எனக்கும் கட்சியை சேர்ந்த யாரும் இந்த செயலை செய்யவில்லை. யார் செய்தார் என்று எனக்கு தெரியும்.

ஆனால் நான் கூறினேன் என்றால் வடிவேலுக்கு தான் பிரச்சனை வரும் என்று விஜயகாந்த் தன் மேலே அந்த பழி இருக்காட்டும் என்று பெருந்தன்மையாக கூறிவிட்டாராம்.

இதுபோல் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரிய மனுஷன் என்ற நிலையை பல முறை நிரூபித்திருக்கிறார் விஜயகாந்த்.