சீட் கிடைக்காமல் கதறிய கஸ்தூரி ராஜா மகள்!! தனுஷ் குடும்பத்துக்கு இப்படியொரு உதவியை செய்த விஜயகாந்த்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த இயக்குனர் கஸ்தூரி ராஜா தன் இரு மகன்களான செல்வராகவன் மற்றும் தனுஷை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து உச்சக்கட்ட நிலையில் சேர்த்திருக்கிறார். அதேபோல் இருமகள்களும் தற்போது மருத்துவர்களாக இருக்கிறார்கள்.
மூத்த மகள் பல் மருத்துவராகவும் இரண்டாம் மகள் மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் கஸ்தூரி ராஜா அளித்த பேட்டியொன்றில் மகளுக்கு விஜயகாந்த் உதவிய செய்தி பற்றி பகிர்ந்துள்ளார். மகள் கார்த்திகா மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் ஆசையில் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் கட் ஆஃப் மார்க்கில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தார்.
தன்னால் மருத்துவராக முடியாத விரக்தியில் வீட்டில் உட்கார்ந்து அழுதிருக்கிறார் கார்த்திகா. அந்த பக்கமாக சென்ற விஜயகாந்த், திடீரென கஸ்தூரி ராஜா வீட்டிற்கு சென்றிருக்கிறார். கார்த்திகா அழுவதை பார்த்த விஜயகாந்த் ஏன் அழுகிறார் என்று கேட்டு விசயத்தை வாங்கியிருக்கிறார்.
உடனே ராமச்சந்திரா மருத்துவமனையின் தலைமையான உடையாருக்கு கால் செய்து இதுகுறித்து பேசியுள்ளார். உடனே அவரை நேரில் வரச்சொல்லி இருக்கிறார் உடையார். நேரில் சந்தித்து பார்த்து மருத்துவ சீட்டினை பெற்றுள்ளாராம் கார்த்திகா.
இப்படியொரு உதவியை செய்துள்ள விஜயகாந்த் பற்றி கூறியிருக்கிறார் கஸ்தூரி ராஜா. இதுபோல் பலருக்கு உதவிய விஜயகாந்த் தற்போது, உடல் நிலை சரியில்லாமல் இருப்பது வேதனை அளித்து வருகிறது.