நடுரோட்டிற்கு வந்த நடிகை? ஹரி நாடாருக்கும் விஜயலட்சுமிக்கும் என்ன தொடர்பு ! என்ன காரணம்!

சினிமாவில் நடிகைகள் என்றாலே பல பிரச்சனைகளில் சிக்கி பேசப்படும் பொருளாக மாறிவிடுவார்கள். அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை விஜயலட்சுமி.

சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தங்கி வரும் விஜயலட்சுமி சகோதரியுடன் தங்கி வந்துள்ளார். திடீரென அவரின் அப்பார்ட்மெண்ட் ரூமில் வேறொருவர் தங்கி குளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய விஜயலட்சுமி, தன்னை ஹரி நாடார் தான் இங்கு அழைத்து வந்ததாகவும், அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இப்படி நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தனது பொருட்களை வெளியில் தூக்கிப் போட்டு உள்ளதாகவும் வாடகை பணம் பிரச்சனை என்றால் தன்னை அழைத்தோ அல்லது தன்னை தங்க வைத்த ஹரி நாடார் அவர்களிடம் பேசியிருக்கலாமே என்று கூறினார். மேலும் இதுபற்றி, அபார்ட்மெண்ட் தரப்பில் இருந்து ஒருவர் கூறியது, ஹரி நாடார் அவர்களுக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஜாவித் என்பவர் தான் இவரை கூட்டி வந்து தங்க வைத்துள்ளார்.

வாடகை பணம் தராததால் அவரை அனுப்பினோம் இதுபற்றி விஜயலட்சுமி நாடகமாடி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் அப்பார்ட்மெண்ட் உதவியாளர் ஒருவரை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியுள்ளார் விஜயலட்சுமி.

இதனால் தேனாம்பேட்டை காவல்துறையினர் விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி வேறு இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்