கேரளாவுக்கு டிக்கெட் போட்டுட வேண்டியதுதான்... படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்..

Vijay Kerala Venkat Prabhu Greatest of All Time
By Jai Aug 27, 2024 09:30 AM GMT
Report

GOAT முதல் நாள் முதல் காட்சி

தமிழ் ரசிகர்களை தாண்டி கேரளா, ஆந்திரா - தெலுங்கானா, கர்நாடக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் விஜய்.

தற்போது கோட் படத்தின் ரிலீஸ்-க்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தமிழ் நாட்டில் முதல் நாள் முதல் ஷோ காலை 9 மணிக்குத்தான் என்று தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

கேரளாவுக்கு டிக்கெட் போட்டுட வேண்டியதுதான்... படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்.. | Vijays Goat Movie Fdfs At 4 Am In Kerala

கேரளாவுக்கு டிக்கெட்

இந்நிலையில் விஜய்யின் கோட் படத்தை கேரளாவில் முதல் நாள் முதல் ஷோவாக காலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளனர்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தமிழ் ரசிகர்கள், கேரளாவுக்கு டிக்கெட் போட்டுட வேண்டியதுதான் என்று கூறி இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டில் அதிகாலை காட்சிக்கு தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருக்கிறது.

அப்படி காலை 6 மணி அல்லது 7 மணிக்கு கோட் படத்தில் முதல் காட்சி தொடங்கும் என்றும் ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் வழக்கம்போல் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Gallery